உயிர் கொண்டு வளர்வது
உண்மைக்கு அண்மையானது
உலகம் உள்ளவரை அழியாதது
கலை என்னும் ஆபரணம்
மூச்சின்றி இயங்காதது
உணவின்றி நிலையாதது
உயிரின்றி உருவாகாதது
உடல் என்னும் ஆபரணம்
அலை மோதும் கடலானது
ஆழத்தில் அருவமானது
மரணத்தின் நிழலானது
மனம் என்னும் ஆபரணம்
ஆழ்கடலிலும் ஆழமானது
அனாகதத்தின் இருப்பானது
எழும் பிறப்பின் வேரானது
அன்பெனும் ஆபரணம்
கடவுள் கற்பித்தது வாழ்க்கை
அதில் மௌனமே அவன் ஆபரணம்
மனிதன் கற்பித்தது கடவுள்
அழகு இயற்கையே அதற்கு ஆதாரம்
