சத்திய யுகம்




புதிய நூற்றாண்டு மலர்ந்தது
விஞ்ஞானம் அதன் விதையானது
தொழில் நுட்பங்கள் விருட்சமாயின
மனிதநேயம் குறுகிப் புல்லாகிப் போனது







ஆதாரம் கடவுள் என்றது சனாதனம்
ஆதாம் ஏவாள் மக்கள் என்றது கிறித்தவம்
அல்லாவே அனைத்தும் என்றது இஸ்லாம்
அன்பே வாழ்வின் குறிக்கோள் என்றது பௌத்தம்


இச்சிகரங்கள் அனைத்தும் இன்று நம்பிக்கை வட்டங்கள்
எழுச்சி பெறுவதோ நமது வாழ்க்கை வசதிகள்
வழிகாட்டும் கோணமாய் விஞ்ஞானம் - இவை
முட்டி மோதும் ரண களம் நம் பூமி - நம்


தேடல்கள் உடலை வளர்க்கும் உணவுக்காகிவிட்டன
ஆய்வுகள் போருக்கான ஆயுதங்களுக்காகிவிட்டன
ஆனந்தங்கள் சிறு பொதிகளில் அடங்கிவிட்டன - நம்
மரணங்களும் அணு அணுவாய் நிகழ்கின்றன


மண்ணில் சுவடற்றுப் போன உயிரினங்கள் பல
மனிதம் நன்கு துளிர் விட்டுக் கொள்ளட்டும்
பல்கோணிகள் இன்னும் தெரியவில்லை
வட்டங்கள் அனைத்தும் மறையவில்லை


5 comments:

said...

நவன்!

ரொம்ப நாளா உங்க வீட்டுப்பக்கம் வரேல்ல. இப்ப வந்து பார்த்தா ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும், இருக்கு. ரொம்பப் பெரிய ஆட்களெல்லாம், உங்க பதிவப் பாரத்துக் கருத்துச் சொல்லியிருக்காங்களே. தொடருங்கள்..:))

said...

தேடல்கள் உடலை வளர்க்கும் உணவுக்காகிவிட்டன
ஆய்வுகள் போருக்கான ஆயுதங்களுக்காகிவிட்டன
ஆனந்தங்கள் சிறு பொதிகளில் அடங்கிவிட்டன - நம்
மரணங்களும் அணு அணுவாய் நிகழ்கின்றன//

நவன்,

அருமையாக வந்திருக்கு. சொன்னது என்னவோ நிசர்சனம், மறுப்பதற்கில்லை. Keep writing, man.

regards,

TheKa.

said...

மலை நாடான்,தெகா உங்கள்
வருகைக்கும்
கருத்துப் பகிர்வுக்கும் நன்றி!

said...

இப்ப பாருங்க வருதான்னு, நவன்...

said...

ஆமாம் வந்துச்சு. இனிமேல் வரணும்னா நான் தவமிருக்கனும் :)